முள்ளிப் பொத்தானை விளையாட்டுக் கழகத்தின் 71 ஆவது சுதந்திர தின விழா


71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளிப்பொத்தானை விளையாட்டுக் கழகத்தினால் 2019.02.04 ஆம் திகதி தி/கிண்/பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் சிரமதானமும், மரநடுகை நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் முள்ளிப்பொத்தானை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.எம்.எச்.ஜெனீஸ் அவர்களின் தலைமையில் கழக அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதுடன், ஆசிரியர்களான திரு.எஸ்.ஏ.றம்ஷி மற்றும் திரு.எச்.எம்.ஹனீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பலரும் நாட்டின் சமாதானம் நிலைத்திருப்பதற்காக வேண்டி வெண் புறாக்களை பறக்க விட்டது சிறப்பம்சமாக இந்நிகழ்வில் அமைந்தது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *