நாட்டில் உள்ள அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டை

நாளை முதல் வைத்தியசாலைகளில் இலத்திரனியல் சுகாதார அட்டை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்டமாக நாளை காலை ஒன்பது மணி அளவில் களுத்துறை பொது வைத்தியசாலையிலும், 11 மணியளவில் பேருவளை தள வைத்தியசாலையிலும் இலத்திரனியல் சுகாதார அட்டை வழங்கப்பட உள்ளது.

அதேவேளை இலங்கையில் உள்ள அனைவருக்கும் சுகாதார இலத்திரனியல் அட்டை வழங்கப்படும் என சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் தெரிவித்தார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *