கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு பகிரங்க மடல்

ஏ.எஸ்.முகம்மது ஜிப்ரி

எமது மதிப்புக்குரிய சேவைகளின் செம்மல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களே
எமது கிண்ணியா மண்ணினையும் மக்களினையும் நன்கு அறிந்தவர் என்ற வகையில் உங்களிடமிருந்து இந்த சேவையினை எமது எதிர்கால சந்ததிகளின் வாழ்கையில் வசந்தத்தினை ஏற்படுத்துவது எமது அனைவரினது கட்டாயக் கடமையாகக் கருதுகின்றேன்

அந்த வகையில் இலங்கையில் இரண்டாவதாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசமாகவும் கிண்ணியா காணப்படுகின்றது. உண்மையில் மனித வாழ்கைக்கு மிக முக்கியமான ஒன்றாக மருத்துவ சேவை உள்ளது. ஆனால் இங்கு வைத்தியசாலை வெறுமனே பெயரளவில் மட்டுமே இயங்கிவருவதனை நினைக்கும் போது எம்மையரியாமல் மனம் கதருகின்றது.

அது மட்டுமல்லாது எத்தனை காலத்திற்கு நோயாளிகளை கூட்டிக் கொண்டு திருகோணமலை மற்றும் கந்தளாய் மற்றும் மூதூர் போன்ற வைத்தியசாலைக்கு தொங்கு ஓட்டமாக ஓடுவது என்பது தான் கவலையளிக்கும் விடயமாக உள்ளது

இந்த கிண்ணியா வைத்தியசாலை மூலமாக
கிண்ணியா தொடர்க்கம் வானல்லை வரையும், வெள்ளைமணல் தொடக்கம் சீனக் குடா வரையும், கிண்ணியா தொடர்க்கம் நாவலடி வரையேயுள்ள மூவின மக்களின் மிக முக்கியமான வைத்தியசாலையாக இது காணப்படுகின்றது.

இதனை கவனத்தில் கொண்டு பல பல எண்ணிலடங்காத சேவைகளை செய்து இலங்கையில் வாழும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அரசியல் சானக்கியம் கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புழ்ழாஹ் அவர்களே இதனை உங்களது பார்க்கு எடுத்துக் கொள்ளுமாறு எமது மக்கள் சார்பாக பணிவாக வேண்டுகின்றேன்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *