இந்தியாவின் தாக்குதல் பொய்யென பாகிஸ்தான் மறுப்பு

இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல்

300 பயங்கரவாதிகள் பலி என இந்தியா அறிவிப்பு

இது அப்பட்டமான பொய் என பாகிஸ்தான் மறுப்புரை.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் நேற்று அதிகாலை இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.

இருந்தாலும் இதை பாகிஸ்தான் முற்றுமுழுதாக நிராகரித்து உள்ளது இது தேர்தலுக்கான ஒரு புனைவு அறிவிப்பாகும், இப்படியான ஒரு தாக்குதல் நடை பெறவில்லை எனவும் சர்வதேசங்களுக்கு இதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த உள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவிக்கின்றது. இந்திய அரசாங்கம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் அந்த இடங்கள் மனித நடமாட்டமோ குடியிருப்புகளோ இல்லாத ஒரு வெற்றுப் பிரதேசமாகும் எனவும் பாகிஸ்தான் பதில்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய இராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நிலையிலேயே இரு நாட்டுக்கும் இடையிலான எல்லைப் பகுதியை தாண்டி சென்று இந்திய விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இந்திய பாதுகாப்பு எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது.

இந்தியா வேண்டுமென்றே வெறுப்பைத் தூண்டும் வகையில் நடந்துள்ளது இதற்கான பதிலடி கொடுப்பதற்கான காலம், நேரத்தை பாகிஸ்தான் தீர்மானிக்கும் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *