இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை

கைதான இந்திய விமானி அபிநந்தன் நாளை (01) விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 2 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் விமானி ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

கைது செய்யப்பட்ட விமானியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தான் வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ காட்சிகளில் விமானி சிறப்பா க நடத்தப்படுவது காட்டப்படுகின்றது, இருப்பினும் இந்த புகைப்படம் வீடியோ காட்சிகள் தொடர்பாக இந்தியா கண்டனத்தையும் வெளியீட்டு இருப்பதுடன் விமானியை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பாகிஸ்தானிய பிரதமர் உரையாற்றுகையில் நாளை முதலாம் தேதி கைது செய்யப்பட்ட விமானி விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நடனத்தை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அவரை விடுதலை செய்ய இருப்பதாகவும் இவ்வாறு விடுதலை செய்வதாக எங்களை பலவீனமானவர்கள் என்று எண்ணிவிட வேண்டாம் எனவும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் இம்ரான்கானின் இந்த முடிவை இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானியர்களும் வரவேற்றுள்ளதோடு சமூக வலைத்தளங்களில் பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இருஇரு நாடுகளுக்கும் இடையே காணப்படுவது தீவிரவாத பிரச்சனையே தவிர வேறு இல்லை எனவும் இவைகளை சுமுகமான விதத்தில் தீர்க்க விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *