2500 பெண் போலீசாரை சேவையில் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை.

பொலிஸ் சேவையில் 2500 பெண் போலீஸ் வெற்றிடங்கள் உள்ளதாகவும் அதை நடைமுறைப்படுத்த வர்த்தமானி அறிவித்தல் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று (06) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலில் ஜனாதிபதி அவர்கள் தமிழ் மொழியில் கடமையாற்றக் கூடிய போலீசாரின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தமிழர்கள் செறிவாக உள்ள பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ் போலீசார்கள் கூடுதலாக இருக்க வேண்டும் எனவும் மக்கள் தாம் விரும்பிய மொழியில் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யக்கூடிய வசதிகள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *