பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம்

நாளை வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் மேல் மாகாண பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கூறப்பட வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் எம் அசாத் சாலி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் கல்வி அமைச்சின் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை கோர உள்ளது
போதுமான ஆசிரியர்கள் இல்லாதுள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் முக்கியமான பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை அடைய முடியாது உள்ளது. ஆசிரியர்களை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதன் மூலமே மாகாணத்தின் கல்வி தரத்தை உயர்த்த முடியும் என ஆளுனர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தின் கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்த தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் இப்புதிய ஆசிரியர்கள் நியமிக்கபடுவர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *