இது ஆபத்துக்கள் தரும் வெயில் காலம்

வெப்பநிலை வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் இன்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்ப நிலை காரணமாக அதிக களைப்பு, தசைநார் பிடிப்பு, அதிக வெப்பத்தின் காரணமாக பக்கவாதம் என்பன இடம் பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வெயில் காணப்படும் இடங்களில் வேலை செய்பவர்கள் அடிக்கடி நீர் ஆகாரங்களை எடுப்பதுடன் நிழலான இடங்களில் இளைப்பாறுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வயோதிபர்கள் மற்றும் சுகவீனம் உற்றவர்கள் உடல்நிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பிள்ளைகளை கவனிப்பாரற்று விட வேண்டாம் என்றும், அதிக வெயில் சுட்டெரிக்கும் இடங்களில் செயற்பாடுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *