10 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள்

தேர்வு செய்யப்பட்ட கிண்ணியாவில் காணப்படுகின்ற சுமார் 20 விளையாட்டு கழகங்களுக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மகரூப் அவர்களின் பிரத்தியேக செயலாளர் டாக்டர் ஹிழ்மி முகைதீன் வாவா அவர்களினால் கடந்த புதன் கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்தில் மீள்குடியேற்ற செயலணியின் நிதி ஒதுக்கீட்டில் தலா 50000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொரு விளையாட்டு கழகத்திற்கும் 10இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அடுத்ததாக ஏனைய கழகங்களுக்கும் வழங்கப்படும் என பிரத்தியேக செயலாளர் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்
எச்.எம்.ஹனி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *