உயர்கல்வியை தொடர 15 வருட அவகாசத்துடன் 11 லட்சம் கடன்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை சித்தி பெற்றவர்கள் அரசு வங்கிகளின் மூலம் 15 வருடங்கள் அவகாசத்துடன் 11 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுக் கொடுக்க உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் தெரிவித்தார்.

இந்தக் கடன் தொகை உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக பயன்படுத்த மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்டத்தில் இதுதொடர்பான வேலைத்திட்டத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டின் இளைஞர் சமூகத்தை அறிவு மிக்கதாக கட்டி எழுப்புவதுமே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் நேற்று முன்தினம் அமைச்சில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் உயர் கல்விக்காக சித்தி அடைவதுடன் அவர்களில் 30 ஆயிரம் பேர் அரசு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனாலேயே மேற்படி வேலைத்திட்டம் நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும் மேலும் தெரிவித்தார்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *