அரச ஊழியர்களின் ரயில் வொரண்டுகளுக்கு பதிலாக விமான சீட்டு வழங்கும் முறை

அரசாங்க ஊழியர்களுக்கு இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் இலவச உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

மிக ஆரம்ப காலத்தில் மூன்று அல்லது நான்கு ரயில்வே வொரண்டுகளை பயன்படுத்தாத அரசு ஊழியர்களுக்கு விமானச் சீட்டு ஒன்றை வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது இது தொடர்பில் நான் தற்போது ஆராய்ந்து வருகின்றேன். அதே போல சலுகையை மீண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அமைச்சருடனும் சம்பந்தமாக அதிகாரிகளோடும் கலந்துரையாடிய பின்னர் விரைவில் இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைப்போம்.

இது நடைமுறையில் வந்தால் அரச ஊழியர்கள் இரத்மலானையில் இருந்து மத்தல, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, சீகிரிய, பலாலி போன்ற ஏதேனும் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *