புறப்பட்டு சில நிமிடங்களில் வெடித்து சிதறிய விமானம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லயன் எயர் விமானம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த 189 பேர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது நாம் அறிந்த விடயமே

737 மேக்ஸ் 8 என்ற விமானம் தரையில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஆறு மாதங்களில் இரண்டு விபத்துக்களை சந்தித்துள்ள எதியோப்பிய எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தற்போது பல்வேறு கேள்விகளுக்கு ஆளாகியுள்ளது
இந்த இரண்டு விமானங்களும் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியது இரண்டு விமானங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும் இந்த இரண்டு விமானத்திற்குள் தற்செயலான ஒற்றுமை ஏதாவது இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

லயன் எயர் விமானம் அமெரிக்கா விமான நிறுவனத்தின் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது மிகவும் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கின்றது என்று அமெரிக்க போக்குவரத்து துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேரி ஷியோவா குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *