திருகோணமலையின் முதல் முஸ்லிம் தேசிய பாடசாலை

திருகோணமலையின் முதல் முஸ்லிம் தேசிய பாடசாலையாக கிண்/முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயம் தரமுயர்வு- இம்ரான் எம்.பி


பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் அவர்கள் திருகோணமலையின் முதல் முஸ்லிம் தேசிய பாடசாலையாக கிண்/முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் தரமுயர்தப்பட்டுள்ளதாக   தெரிவித்தார்.

நீண்டகாலமாக  திருகோணமலை மாவட்டத்தில்முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையொன்று   இல்லாதகுறைபாட்டை கருத்திற்கொண்டு  திருகோணமலைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் மேற்கொண்ட தொடர் முயற்சியினால்  முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் சர்வதேச மகளிர்தினமான மார்ச் 08 ஆம் திகதி முதல் தேசியபாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மேலும் இப்பாடசாலையானது ஒன்பது மாதங்களுக்குள்தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது, இது இலங்கையின் 361வது தேசியபாடசாலை என்பதும் திருகோணமலை மாவட்டத்தின் 11வது தேசிய பாடசாலை என்பதும் அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்பெண் பிள்ளைகளின் கல்வியின்  முன்னேற்றத்திற்குவழி கோலும் என்பதை நான் திடமாக நம்புகின்றேன். இச்சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன.மேலும் திருகோணமலையில் அண்மமையில் ஏற்பட்ட ஆசிரியைகளின் அபாயா பிரட்சனைகள் போன்ற இன முரண்பாடுகள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தவிர்க்கவும் தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தப்படும் போது எமது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்க்கவும் இது மாற்று வழியாக அமையும் என நம்புகிறேன்.

ஊடகப்பிரிவு

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *