சிராஜ் நகர் வட்டார அபிவிருத்தி கூட்டம்

தெளபீக் நாசீர்

தம்பலகாமம், சிராஜ் நகர் வட்டார அபிவிருத்தி கூட்டம் 2019/03/12 ஆம் திகதி இன்று தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் SM.சுபியான் அவர்களின் தலைமையில்
தி/கிண்/சிராஜ் முஸ்லிம் மகா வித்தியாலய கேட்போர் மண்டபத்தில் நடை பெற்றது.

இதில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் A.அஸ்வர், R.ரெஜீன் மற்றும் பரீதா உம்மா ஆகியோர்களும் தம்பலகாம பிரதேச சபை செயளாலர், உள்ளூராட்சி உதவியாளர், சிராஜ் நகர் கிராம சேவகர், சிராஜ் நகர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிராஜ் நகர் வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதில் எமது சிராஜ் நகர் வட்டாரத்திற்குள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வேலைகள் சம்பந்தமான ஆலோசனைகளை தவிசாளர் SM.சுபியான் அவர்கள் பொது மக்களிடம் கேட்டறிந்து அவ் வேலை திட்டங்களை மிக விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இவ் வேலைத்திட்டத்திற்கு எமது சிராஜ் நகர் வட்டார தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்கள்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *