பப்ஜீ (PUBG) PLAYER’S UNKOWN BATTLE GROUND பற்றி தெரியுமா?

இந்த ஆண்டு அதிக அளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம் பாபுஜி இதன் வெற்றி வரலாறு பற்றி தான் நாம் அறிந்தது உண்மையா?…. கொஞ்சம் பார்க்கலாம்.

பணத்திற்கு வழியின்றி வறுமையில் வாழ்ந்த அவர் எப்படி அந்த நிலைமையில் இருந்து மீண்டு வந்து உலகின் மிகப்பெரிய கேம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆனார் என்பதை பற்றி நாம் இப்பொழுது முழுமையாக காணலாம்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த  விலங்குகளை புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர் தான் இந்த கேமை உருவாக்கியவர். இவர் முதலில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பணத்திற்கு வழியின்றி அயர்லாந்து நாடு தரும் உதவி தொகையை வைத்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரண்டன் என்பவர் கேம்கள் மீது அதிக விருப்பம் கொண்டவராக இருந்ததால் கேம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக கூகுளில் சென்று கேம்கள் தயாரிப்பது பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். பின்னர் அவர் நாள்போக்கில் சில கேம்களை தயாரித்து வெளியிட்டார். இவர் தயாரித்த அனைத்து கேம்களும் மிக பிரசித்தி பெற்றதால் முன்னணி நிறுவனமான சோனி நிறுவனம் இவர் தயாரித்த அனைத்து கேம்களையும் வாங்கிக் கொண்டது மட்டுமின்றி அவருக்கு ஒரு வேலையும் வழங்கியது. இருந்தும் அவருக்கு அங்கு எந்தவித மரியாதையும் கிடைக்கப் பெறாததால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது இன்டர்நெட்டில் தென் கொரியா நாட்டை சேர்ந்த கேம் தயாரிப்பு நிறுவனர் கிம் என்பவர் ப்ரண்டனிடம் நீங்கள் எங்களது கம்பெனிக்கு வந்து விடுங்கள் என்று கூறியவுடன்  சரி என்று சொல்லி SONY-ல் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு தென் கொரியா சென்றார். அங்கு அவருக்கு கிம்  நீங்கள் ஒரு வருடத்தில் ஒரு கேம் ஐ உருவாக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு கிம் அவருக்கு அளித்த வேலை ஆட்கள் வெறும் 35 பேர்கள் மட்டுமே. அவர்களுடன் சேர்ந்து பிராண்டன் ஒரு வருட கடின உழைப்பிற்கு பிறகு உலகின் முன்னணி PUBG கேமை உருவாக்கி வெளியிட்டனர். அந்த கேம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தி கிம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. Brandon இன்னும் பல கேம்கள் நான் தயாரிக்க உள்ளதாகவும் கூறி வருகிறார். ஒரு மனிதன் இந்த நிலையிலிருந்து உயர்வதற்கு கடின உழைப்பு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *