பாராட்டப்பட வேண்டிய இலங்கை மின்சார சபை ஊழியர்கள்

முன்மாதிரியான சிறந்த முறையில் செயல்பட்டு வரும் இலங்கை மின்சார சபையின் கிண்ணியா கிளையின் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக மின் இணைப்பு பெறுவதற்கு வசதியற்ற சம்மவச்சதீவை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வீட்டு மின் சுற்றுக்களையும் (wiring) பூர்த்தி செய்து மின் இணைப்பையும் வழங்கி வைத்துள்ளனர்.

தகவல் : சேகு இஸ்மாயில் ஹஸ்ஸாலி

இதற்கான நிதியினை மின் அத்தியட்சகர் உட்பட அனைத்து ஊழியர்களும் பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, இந்நிகழ்வில் இலங்மின்சார சபையின் திருகோணமலை பிரதேச மின் பொறியாளர் ஏ.சிவதீபன்கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சார சபை கிண்ணியா கிளையின் MM மிஸ்றக் (ES) மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மென்மேலும் உங்களின் இவ்வாறான சேவைகள் தொடர வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவ்வாறான செயல்கள் வாழ்கின்ற இந்த உலகத்திற்கு மறுமைக்கும் நற்செயல்களை ஈட்டிக் கொள்ள வழிவகுக்கும் என்பதனால் இது போன்ற செயல்களை அனைவரும் செய்து ஈருலகிலும் அதன் பயன்களையும் அடைந்து கொள்வோம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *