விதிமுறைகளை மீறுவோர் கணக்குகள் முடக்கம்

Google play storeஇல் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை தவிர ஏனைய வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் முடக்கப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற வகையில் வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தவர்களின் கணக்கு உள்ளிட்டவைகளையும், தனிப்பட்ட விபரங்களும் அடியோடு முடக்கப்படுவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி:
உலகம் முழுதும் வாட்ஸ் ஆப் பலராலும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.
இதனால் வாட்ஸ் ஆப் செயலி முன்னிலை வகிக்கின்றது.

பதிவிறக்கம் செய்ய:
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி உலகம் முழுக்க பல பில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதை அதிகாரப்பூர்வமான முறையில் கூகுள் பிளே ஸ்டார், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

3ம் நிலை வாட்ஸ் ஆப்:
எனினும் சிலர் மூன்றாம் நிலை (Third Party) செயலிகள் மூலம் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி தகவல் பயன்பாட்டு செயலிகளை பயன்படுத்துவ மிகவும் ஆபத்தானது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவிக்கின்றது.

தகவல்கள் திருட்டு:
தனிநபர் ஒருவரின் தகவல்கள் புகைப்படங்கள், வீடயோக்கள் உள்ளிட்ட பிற விபரங்களை 3ம் நபர் யார் வேண்டுமானலும் கையாளலாம். இதன் காரணமாக வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கணக்கு முடக்க அறிவிப்பு:
3ம் நிலை செயலியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வந்தோர்களின் கணக்குகளை முடக்கம் செய்தவாக வாட்ஸ் ஆப் அறிவித்துள்ளது.
அவர்களின் முந்தை விபரங்கள் மீட்கப்படுப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

வாட்ஸ் ஆப் பாதுகாப்பு:
வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி டார்க்மோடு, கைவிரல் மூலம் வாட்ஸ் ஆப் லாக் செய்யும் வசதி போன்ற மேம்படுத்தப்படுகின்றது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *