நியூசிலாந்து பள்ளிவாயல் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ஸ் நகரில் உள்ள இரு பள்ளிவாயல்களில் நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 இருந்து 57 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 5 பேர் இந்தியர்கள் என்பதை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட நகரில் உள்ள இரு பள்ளிவாயல்களில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 57 பேர் பலியானார்கள் இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்த தீவிரவாதி தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக 74 பக்கத்தில் கோரிக்கை ஒன்றை நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட சிலருக்கு அனுப்பியுள்ளார் ஆனால் இதில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன என்பது தெரியவில்லை.

அவுஸ்திரேலியாவில் பிறந்த brunton torrent எனும் 28 வயது நிரம்பிய வெள்ளை இனவெறி பிடித்த தீவிரவாதி ஒருவரின் துப்பாக்கி சுடுவதை பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார் அதன்பின் அவரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பலஸ்தீனத்தை சேர்ந்த 19 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 6 பேர், துனிசியாவை சேர்ந்த 5, பேர் பங்களாதேசை சேர்ந்த 5, பேர் மொரோக்கோ நாட்டினர் 4, எமன் 3, ஈராக் 2, 2 பாகிஸ்தான்
மற்றும் சிரியா ஆப்கானிஸ்தான் ஈரான் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் ஒருவர் வீதம் மொத்தம் 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *