சிக்கனமாக பயன்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற வறட்சியான கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேற்று 26ம் தேதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது இந்த யோசனையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் முன் வைத்தார்.

மூன்று மாதங்களுக்கு வீடுகளில் இரண்டு மின் விளக்குகளை அணைப்பதற்கும், மதஸ்தலங்கள், அரசாங்க அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் மின் பாவனையை பத்து சதவீதத்தினால் குறைப்பதற்கும் தேவையற்ற வீதி விளக்குகளை அணைப்பது மட்டுமல்லாமல் அவைகளை வழமையான நேரத்திற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக அணைத்தல் போன்ற விடயங்களில் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தல் தொடர்பாகவே அமைச்சரினால் யோசனை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *