கிண்ணியா அரசியலும், முன்னால் நகரபிதா ஹில்மியின் கட்சி மாற்றமும் . ( ஆய்வு 01 )


இலங்கை அரசியல் வரலாற்றில் கட்சி விட்டு கட்சி மாறுவது ஒரு சாதாரணமான விடயமாக சில சமயங்களில் எண்ணப்படுகிறது சில வேளைகளில் அது ஒரு தேசிய மாற்றத்தையும் காட்டுகிறது.

கிண்ணியா ஐனி சவூதியில் இருந்து.

இந்த அடிப்படையில் ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்க அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சிக்குள் ஏற்பட்ட வாரிசு அரசியல் தாக்கத்தால் கட்சியை விட்டு வெளியேறி சுதந்திர கட்சியை ஆரம்பித்தார். பின்னர் பிரேமதாச காலத்தில் லலித் அணி வெளிவந்து ஒரு புதிய கட்சியை ஆரம்பித்தார்கள். பிறகு கட்சிக் குழப்பங்கள் முடிந்ததும் தாய்க் கட்சியிலேயே இணைந்தார்கள். இப்படி அதிகமான நிகழ்வுகள் இலங்கை அரசியலில் நடந்தாலும் சிலது வெற்றியளித்தது பலது தோல்வியும் ஏமாற்றமும் அதிகம் சந்திக்கும் நிலையும் தந்தது.

இந்த நிலையில் அண்மையில் திருகோணமலையில் ACMC இல் இருந்து SLMC க்கு கட்சி மாறிய முன்னால் கிண்ணியா நகரசபை சேர்மன் ஹில்மி மஹ்ரூப் அவர்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதுவாகும். அதாவது, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் மூலம் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல் முதலில் காலடி எடுத்து வைத்தது ACMC அதில் ACMC இன் கிழக்கு மாகாணத்தின் முதல் வெற்றியாகவும் முதல் நகர பிதாவாகவும் இவர்தான் வந்தார்.

அதேநேரம் கிழக்கில் ACMC உள்ளே வரக்காரணமானவர் என்றும் நாம் இவரைக் கூறலாம். இப்படி இருக்கையில் இவர் ஏன் கட்சி மாறினார் ? என்ற ஒரு கேள்வி பலரது உள்ளத்திலும் எழுந்த வண்ணம் உள்ளது அதுவும் நியாயம்தான். அதுக்கு ஒரே பதில் மாவட்ட தலைமையின் உள் கட்சி வாரிசு போட்டி அரசியலாகும்.

இந்த வகையில் திடீரென ஒருவர் கட்சி மாறினார் என்பதை விட அவர் மாறிய சூழ்நிலையை சரியாக சொன்னால் தெளிவாக இருக்கும். அதாவது, திருமலை மாவட்ட முஸ்லிம்களின் அரசியலை நிர்ணயிப்பது அரைவாசி முஸ்லிம் வாக்குகளை வைத்திருக்கும் கிண்ணியாதான் ( 45 ஆயிரம்).

இந்த வாக்கு பலம் இங்குள்ள அரசியல் வாதிகளை வாரிசு அரசியலை கொண்டு வர தூண்டுகிறது. அதாவது, 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு வரை மூதூர் தொகுதியில் எம் பியாக இருந்த மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களுக்கு பிறகு மகன் நஜிப் ஏ மஜீத் அவர்கள் வாரிசாக அந்த இடத்துக்கு வந்து கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவும் இருந்தார்.

மர்ஹூம் அப்துல் மஜீத்

இதற்கு முன்னர் 1952 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூதூர் தொகுதி எம், பியாக இருந்த MEH. அலி அவர்களின் பின் அவரின் சகோதரர் 1977 ஆம் ஆண்டு ஐ தே கட்சி எம் பியாக மர்ஹூம் MEH. மஹ்ரூப் அவர்களும் இதை தொடர்ந்து அவரின் மகன் தற்போதைய திருமலை மாவட்ட ஐ தே கட்சி எம் பி இம்ரான் மஹ்ரூப் அவர்கள் தகப்பனின் இடத்துக்கு வாரிசாகவும் வந்தார். இந்த குடும்ப அரசியலுக்கு இவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல நாடு பூராவும் நடக்கும் ஒரு அரசியல் நிகழ்வுதான்.

மர்ஹூம் MEH. மஹ்ரூப்

இந்த அடிப்படையில் திருமலை மாவட்ட ACMC எம் பி அவர்களும் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் தனது வாரிசாக 2011 ஆம் ஆண்டு தனது கடைசி சகோதரன் அப்துல்லா லாபிர் அவர்களை உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்கி தோல்வி கண்டாலும் தற்போது நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் மீண்டும் தனது மருமனை அதே கிண்ணியா நகர சபை தேர்தலில் களமிறக்கி மீண்டும் தோல்வியை சந்தித்தவர் தனது அடுத்த கட்ட முயற்சியாக நடக்கவுள்ள மாகாண சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ACMC சார்பில் தனது அடுத்த மருமகன் ஹில்மி முகைதீன் பாவா அவர்களை களம் இறக்குவதுக்கு முயற்சி எடுக்கும் இந்த தருணத்தில்தான் ஏற்கனவே மாகாண சபை தேர்தலில் ACMC ல் போட்டியிட காத்திருக்கும் ஹில்மி மஹ்ரூப் அவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போகும் என்ற நோக்கில் அவர் ACMC இருந்து SLMC கட்சி மாறினார்.

ஆனால் அவரை தலைவரும் அமைச்சருமான ரிஷாத் அவர்கள் வெளியே போகவும் சொல்லவில்லை மீண்டும் வந்தால் சேர்த்து கொள்ள முடியாது என்றும் சொல்லவுமில்லை. அன்று நடந்த வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரிஷாத் அவர்களிடம் கல்முனை ஜெமீல் மற்றும் திருகோணமலை ஹில்மி மஹ்ரூப் இருவர்களும் கட்சியை விட்டு வெளியே போவதாக சொல்லப் படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள் “அப்படி எந்த தகவலும் இல்லை கட்சி கொள்கைக்கு மாறாக எவரும் செயல்பட முடியாது எமது கட்சியில் எவரும் போகலாம் எவரும் வரலாம்” என்று பதிலளித்தார்கள்.

இலங்கையில் செயல்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகளில் தேர்தல் காலங்களில் கட்சி விட்டு கட்சி மாறுவது சாதாரண ஒரு விடயமாகும். உதாரணமாக திருமலையில் அப்துல்லா மஹ்ரூப் , பாயிஸ் லோயர் காத்தான்குடியில் சிப்லி பாரூக் கல்முனையில் ஜமீல், சம்சூதீன், துல்கர் நசிம் மற்றும் மீரா சாய்ப் என பட்டியல் நீண்டு கொண்டே போகும் இப்படி மாறியவர்கள் அடையாளம் இல்லாமல் அனாதை ஆனவர்களும் உண்டு பிரபலமான பலரும் உண்டு. இந்த அடிப்படையில் வைத்தியரும் லோயருமான ஹில்மி மஹ்ரூப் அவர்களின் இழப்பினால் திருகோணமலையில் ACMC க்கு தாக்கத்தை கொடுக்குமா? இவரின் வருகையால் SLMC க்கு வளர்ச்சி தருமா? இவர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துள்ளாரா? அதனால் இவரின் அரசியல் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை இன்ஷா அல்லாஹ் இரண்டாம் ஆக்கத்தில் பார்ப்போம்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *