கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகள் “ஏ” தரம் ஆன போதிலும் அதற்கான வேலைத் திட்டங்கள் இன்னும் முழுமையாகவில்லை

பாராளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற சுகாதாரம், போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவலர்கள் மற்றும் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்,எஸ் தெளபீக் அவர்கள் உரையாற்றுகையில் “கிண்ணியா. மற்றும் மூதூர் வைத்தியசாலைகள் “ஏ”தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்ட போதிலும் அதற்கான வேலைத் திட்டங்கள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டு உள்ளதா என்பது பற்றி எதுவும் எமக்கு தெரியாமல் உள்ளது” என்றார்.

கடந்த 2018 மே மாதமளவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தின்போது அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார் ஆனால் ஒரு வருடம் ஆகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை, நாம் இது தொடர்பில் பல தடவைகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் எனவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *