இனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (02)

  • மர்ஹூம் வீ.ஆர்.ஜஹ்பர்

மர்ஹூம் ஜஹ்பர் அவர்கள் பெரிய கிண்ணியாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த வாப்புராசா – ராபியத்துல் அதபியா உம்மா தம்பதிகளின் ஏக புதல்வராக 1955.12.31 இல் பிறந்தார்.

கிண்ணியா மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் அங்கு 1983இல் வர்த்தகமானி பட்டம் பெற்றார். பட்டம் பெற்றவுடன் இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. கெக்குனுகொல்ல முஸ்லிம் வித்தியாலயம், வெள்ளைமணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்பித்துள்ளார்.

மன்னார் மாவட்டம் பெரியமடுவைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் உளிதா பேகத்தை தனது வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். பஹ்மிதா பேகம் என்றொரு மகள் இவர்களுக்குண்டு.
மன்னாரை தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்ட இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மன்னாரில் இடம்பெயர்ந்த்திருந்த மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியோடு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறு 1990.08.18 இல் பொருட்களை லொறியில் எடுத்துச் செல்லும் வேளையில் வவுனியா – மன்னார் வீதியில் வைத்து இவரும், இவருடன் சென்றவரும் லொறியுடன் கடத்தப்பட்டனர். இன்று வரை இவர் மீளத்திரும்பவில்லை. காணாமலாக்கப்பட்ட இவர் அப்போதே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் நம்புகின்றனர்.

மர்ஹூம் வீ.ஆர்.ஜஹ்பர்

அந்த வகையில் இவரது ஜனாஸா கண்டெடுக்கப்படவோ அல்லது உறவினர்களால் நல்லடக்கம் செய்யப்படவோ இல்லை. எனவே, பயங்கரவாதத்தினால் காவு கொள்ளப்பட்ட அப்பாவிகளுள் ஒருவராக இவர் கருதப்படுகின்றார்.

துடிப்பும், ஆர்வமும் உள்ள இவர் சமூகசேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார். தனது சமூகம் கஷ்டப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது சமூக மேம்பாட்டுக்காக தன்னாலான பணிகளை முன்னெடுத்துள்ளார். இவ்வாறான சமூகப்பணி செய்த வேளையிலேயே இவர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளார்.

தனது 35வது வயதில் கடத்தப்பட்ட இவரது கப்றறை வாழ்வும், மறுமை வாழ்வும் சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்
அல்லாஹூம்மஹ் பிர்லஹூ வர்ஹம்ஹூ

துறையடியில் தேநீர்க்கடை வைத்திருந்த மர்ஹூம் வாப்புராசா அவர்கள் தான் இவரது தந்தை. ஓய்வு பெற்ற ஆசிரியை கைருன்னிஸா, ஆசிரியைகளான இல்முன்னிஸா, றிம்சுன்னிஸா மற்றும் றிஸ்வத்துநிஸா ஆகியோர் இவரது சகோதரிகள்.


Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *