தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கு பதிலாக தரம் 7 அல்லது 8ல் பரீட்சை

*தரம் 5 புலமைப்பரிசிலிற்கு பதிலாக தரம் 7 அல்லது 8ல் பரீட்சை

*பட்டங்கள் பெற்ற பின்பு வீதியில் நின்று வேலை வாய்ப்புக்கள் கோரும் நிலை மாற்றப்படும்.

*வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல் கல்வித்திட்டம்

கடந்த திங்கட்கிழமை கொட்டகம சுபாரதி மகா வித்தியாலயத்தில் “சிறந்தவை பிள்ளைகளுக்கே” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்
“தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக தரம் 7 அல்லது தரம் 8ல் பரிட்சை ஒன்றினை நடாத்தி அந்த பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் மாணவர்களை மேம்படுத்தும் வகையில் கல்வியாளர்களின் வழி வழிகாட்டலின் ஊடாக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக குறிப்பிட்டார்.

நடைமுறையில் இருக்கின்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் தொடர்பில் கல்வி, விஞ்ஞான ரீதியில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் இந்த புலமைப்பரிசில் வறிய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் அவை இன்று பிரபல பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான ஒரு தடை தாண்டலாக மாறி இருப்பதன் காரணமாகவே அதற்கான மாற்று வழியை அறிமுகம் செய்கின்றோம்.

தற்போது பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் 86 சதவீதத்தினர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்களாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பட்டங்களை பெற்ற பின்னர் வேலைவாய்ப்புக்களை தரக்கோரி வீதி ஓரத்தில் போராட்டங்களை மேற்கொள்ளும் கல்வி முறையில் விரைவில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அதிமேதகு ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். போட்டித்தன்மையை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் சகல பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நற்பண்புகள் உடைய மாணவர் சமுதாயத்தை கட்டி எழுப்பவும் கல்வி முறையில் உட்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கல்வித் துறையினர் அனைவரும் துரிதமான கவனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *