முச்சக்கர வண்டி இறக்குமதி மற்றும் மாணவர்களின் டியூசன் போன்றவற்றில் கட்டுப்பாடு?

நேற்று புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் அமைச்சர் நவீன் திஷானாயக்க அவர்கள் உரையாற்றுகையில் நோக்கில் தற்போது ஒரு மில்லியன் முச்சக்கர வண்டிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை ஏற்படுகின்றது இதன் காரணமாக முச்சக்கர வண்டிகளின் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும்.


முச்சக்கர வண்டிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது போன்று மாணவர்களின் டியூசன் வகுப்புகளையும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது தற்போது அதிகரித்து வரும் தனியார் வகுப்புகள் மாணவர்களுக்கு பெரும் சுமையாகி உள்ள நிலையில் அதனை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஏன் கட்டுப்படுத்த முடியாது எனவும் இவ்விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தீர்மானம் உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இரப்பர் தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய சீனர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

“சிலோன் டீ” என்பது தூய்மையாக இருக்க வேண்டும். அதனுடன் சீனி கலப்பதை அனுமதிக்க முடியாது, அதற்கான அளவை வரையரை செய்துள்ளோம். எனவே இது தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *