டெங்கு நோயினால் 11 பேர் மரணம்

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் 13 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது இக்காலப்பகுதியில் 11 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக அளவாக உள்ளதாகவும் இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்து 998 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எவருக்காவது காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் தான் விரும்பியவாறு கைவைத்தியம் மேற்கொள்ளாது உடனடியாக வைத்திய சாலையை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *