ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்குநேர் மோதி விபத்து!

நேபாளத்தில் ஹெலிகொப்டர் ஒன்றும் சிறிய ரக விமானம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகிலுள்ள விமான நிலையத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானமும் ஹெலிகொப்டரும் மேற்படி விமான நிலையத்திலிருந்து மேலே கிளம்ப முற்பட்டபோது ஓடுபாதையில் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி விமானத்தின் துணை விமானி மற்றும் தரையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *