வதந்திகளை நம்பி யாரும் உணர்ச்சிவசப்பட்டு செயற்பட வேண்டாம் -ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் தற்போது போலியான வதந்திகள் பரவி வருகின்றன இந்த போலியான செய்திகளை நம்பி எவரும் உணர்ச்சிவசப்பட்டு செயற்பட வேண்டாம் என அதிமேதகு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையால் தான் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதன் பின்னணி என்ன என்பதை அறிய முப்படைகளும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நேற்று ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது மேலும் இதில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்கு வெளிநாடுகள் கண்டனங்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *