இறுதிப் போட்டியில் நடந்தது தவறா? இல்லையா? பேசுகின்றார் அம்பயர் தர்மசேனா

அம்பயர் குமார் தர்மசேனா கொடுத்த 6 ரன்கள் உலக கோப்பை இறுதிப்போட்டியின்போது  ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் களத்தில் அன்று என்ன நடந்தது; ஏன் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.

இந்தாண்டு உலக கோப்பைப்போட்டி பைனல் எப்போதும் இல்லாத அளவில்  விறுவிறுப்பு; பதட்டம் அனைத்தும் சேர்ந்து இருந்தது மட்டுமல்லாமல்  சர்ச்சைக்கும் பஞ்சமில்லமால் இருந்தது.

இங்கிலாந்து கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது .  4வது பந்தில் ஸ்டோக்ஸ் ரன் ஓடினார். அப்போது கப்தில் பவுண்டரி லைனில் இருந்து த்ரோ செய்த பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு எல்லைக்கோட்டைத் தொட்டது. ஸ்டோக்ஸ், ரஷீத் 2 ரன்கள் ஓடினர். இதனால், ஓவர் த்ரோ என்ற வகையில் இங்கிலாந்து அணிக்கு 6 ரன்களை வழங்கினார் கள நடுவர் குமார் தர்மசேனா. ஸ்டோக்ஸ் – ரஷீத் ஜோடி, பந்தை த்ரோ செய்தபோது 2 ரன்கள் முழுமையாக ஓடி முடிக்காத நிலையில் 6 ரன்கள் கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஓவர் த்ரோவுக்காக 5 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக கூடுதல் ரன் ஒன்று கொடுக்கப்பட்டதால், போட்டி சமநிலை ஆனது. இதனால், சூப்பர் ஓவரை நோக்கி சென்றது. நடுவர் தர்மசேனா மட்டும் ஒரு ரன் கூடுதலாகக் கொடுக்காமல் இருந்திருந்தால் நியூசிலாந்து கோப்பையை வென்றிருக்கும்’ என்று கடும் விமர்சனம் எழுந்தது.

மூத்த நடுவர்களான சைமன் டாபுல், ஹரிஹரன் ஆகியோர் *ஓவர் த்ரோவுக்கு 6 வழங்கியது தவறான முடிவு, 5 ரன்கள்தான் வழங்கி இருக்க வேண்டும்* என்று  விமர்சித்திருந்தனர். இந்நிலையில் தன் மீதான சர்ச்சை குறித்து அம்பயர் தர்மசேனா, இலங்கையிலிருந்து வெளியாகும்`சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ளார்.

என்னுடைய தீர்ப்பு தவறானது என்பதை  “தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்தபோது,  அறிந்துகொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. அந்த இடத்தில் எந்த வசதியும் எனக்கு இல்லையே. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை. நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர்.

அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பாரக்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் கூட பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவை வெளிப்படுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *