நோய் தீர்க்கும் பழைய சோறு

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழையசாதத்தில், வைட்டமின் பி6
வைட்டமின் பி12 போன்றன ஏராளமாக இருக்கிறது என்பதை புது ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

சாதத்துடன் கூடவே இரண்டு சிறிய மற்றும் வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம் இதனால் எந்தக் காய்ச்சலும் நம்மை நெருங்காது.

இன்னும் பழைய சாதத்தின் நன்மைகள் சில:-

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் உண்பதால் உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு உடல் எடையும் குறையும்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜிக், அரிப்பு போன்றவை கூட சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வர, நோய் குணமாகி விடும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *